எங்களை பற்றி சிறு அறிமுகம்

அன்பிற்கினிய உறவுகளே வணக்கம்,

நாட்டில் ஒவ்வொரு ஜாதிக்கும் சங்கங்கள், கிளப் போன்றவை உள்ளன. ஆனால் நமது ஜாதிக்கென்று ஒரு சங்கமும் இல்லையென்ற தாக்கத்தினால் உருவானது தான் இந்த “பிரெசிடென்சி சர்விஸ் கிளப்” .1995ஆம் வருடம் முதன் முறையாக படித்த பட்டதாரிகளை மட்டும் உறுப்பினராக வைத்து ஆரம்பிக்கப்பட்டது .

அதற்கடுத்தார்போல் நம் இனத்திற்கென்று தனியாக திருமண தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கடுத்தார்போல் வருடந்தோறும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அன்று நமது கள்ளர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கும்,படித்து தேர்வு எழுதி உயர்பதவி அடைந்தவர்களுக்கும்,தொழிலில் சாதனை படைத்தோர் என அனைவரையும்  அழைத்து கௌரப் படுத்துகிறோம்

வருடந்தோறும் நமது சங்கத்தில் உறுப்பினர்களுக்கு காலண்டர் வழங்கப்பட்டு வருகிறது.உறுப்பினர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்கிறோம். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 3 ம் தேதி வெள்ளையனின் கைரேகை எதிர்த்து போரிட்டு துப்பாக்கி சூட்டில் இறந்த 16 பேர்களின் நினைவாக நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பெருங்காமநல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை மிஞ்சியது என்று அவர்கள் நினைவாக நினைவு தூண் நம் ‘பிரெசிடென்சி சர்விஸ் கிளப் ” சார்பாக முயற்சி எடுத்து நிறுவப்பட்டது.

நம் இனத்திற்க்காக பாடுபட்ட திரு.P.K.மூக்கையாதேவர் அவர்களின்’ பிறந்தநாளான ஏப்ரல் மாதம் 4 தேதி மற்றும் நினைவு நாளான செப்டம்பர் 6 தேதி அன்றும் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.மேலும் யானைக்கல்லில் அமைந்துள்ள திரு.ஜோசப் அவர்களின் பிறந்தநாளான ஜூன் மாதம் 5 தேதி ,மற்றும் நினைவு நாளான மார்ச் மாதம் 5ம் தேதி அன்றும் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. வருடந்தோரும் அக்டோபர் 30-ல் கைரேகை சட்டத்தை எதிர்த்து.வெற்றி பெற்று கொடுத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

இப்பேர்ப்பட்ட இனத்தில் பிறந்ததை நினைத்து நாம் மிகவும் பெருமை கொள்ள வேண்டும்.ஏனென்றால் உலகில் மனித இனம் முதன் முதலாக ஆப்பிரிக்காவில் சுமார் 3,00,000 (மூன்று லட்சம்) வருடங்களுக்கு முன்னால் தோன்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கப்படுகின்றன.இதில் நம் பிரமலைக்கள்ளர் இனம் ஒன்று என்று பல ஆதார பூர்வமான அறிவிப்புகள் வந்துள்ளன.

இது எப்படி என்றால் ஆதிமனிதனின் DNA (M130Y) யை வைத்து உலகம் முழுவதும் உள்ள மனிதர்களின் DNA யை எடுத்து ஒப்பிட்டு பார்க்கும்போது அதில்   இந்தியாவில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி தாலுகாவில் செல்லம்பட்டி யூனியன் ஜோதிமாணிக்கம் கிராமத்தில்  திரு.விருமாண்டி அவர்களின்  DNA ஒத்துபோனது

உலகமே வியந்து லண்டனில் உள்ள BBC போன்ற அனைத்து பிரபலமான மீடியாக்கள்,செய்திதாள்கள்,ஆராச்சியாளர்கள் திரு.விருமாண்டியின் வீட்டிற்கு படையெடுத்து,இது எப்படி சாத்தியம் எப்படி இத்தனை வருடம் DNA மாறாமல் உள்ளது என்று பார்க்கும் போது,நமது பிரமலைக்கள்ளர் இனத்தார்கள் ஆதிகாலம் தொட்டு வேறு ஜாதியில் திருமணம் செய்தது கிடையாது.மேலும் தன் சொந்த தாய்மாமன் வழியிலும் ,அத்தை வழியிலும் தான் திருமணம் செய்து வந்தார்கள்.அதனால் தான் பல ஆயிர வருடங்கள் கடந்தாலும் நமது DNA மாறாமல் தொடர்ந்து வந்துள்ளது.எனவே இப்பேர்ப்பட்ட பெருமையுடைய ஜாதியில் பிறந்த நாம் நமகென்று வரலாறு உள்ளது என்பதை மனதில் வைத்து நம் இனத்திலே திருமணம் முடிப்போம் என்று உறுதிமொழி ஏற்போம்.

ஒன்றுபடுவோம் , வென்று விடுவோம்.
மிகப்பெரிய வரலாற்றுடன் சாதிக்க பிறந்தவர்கள் நாம்
வணக்கம்


சங்கத்தின் நிர்வாகிகள்


நிர்வாகிகள் பட்டியல்


  1. பிரசிடென்சி சர்வீஸ் கிளப்

தேதி

தலைவர்

செயலாளர்

பொருளாளர்

30/04/1995

திரு.P.சூரிய ராஜன்

திரு.K.பவுன் ராஜ்

திரு.A.செல்லையா

29/06/1997

திரு.A.செல்லையா

திரு.P.சூரிய ராஜன்

திரு.K.பவுன் ராஜ்

23/08/1998

திரு.V.K.காமாட்சி

திரு.C.ராஜேந்திரன்

திரு.V.மாரீசன்

26/01/2000

திரு.A.செல்லையா

திரு.A.சுப்பிரமணியன்

திரு.R.மதிவாணன்

21/12/2002

திரு.P.சூரிய ராஜன்

திரு.A.ராமன்

திரு.பொன். விஜயன்

31/01/2005

திரு.A.ராமன்

திரு.பொன்.விஜயன்

திரு.M.P.லட்சுமணன்

11/01/2007

திரு.M.உதயம் ராஜேந்திரன்

திரு.பொன்.விஜயன்

திரு.M.P.லட்சுமணன்



  1. பிரமலைக்கள்ளர் சமூகசேவையில் (பிரசிடென்சி சர்வீஸ் கிளப்)

தேதி

தலைவர்

செயலாளர்

பொருளாளர்

01/03/2010

திரு.M.உதயம் ராஜேந்திரன்

திரு.பொன்.விஜயன்

திரு.M.P.லட்சுமணன்

17/03/2013

திரு.M.உதயம் ராஜேந்திரன்

திரு.M.P.லட்சுமணன்

திரு.V.ஈஸ்வரன்



  1. பிரமலைக்கள்ளர்  முன்னேற்ற நலச்சங்கம் (பிரசிடென்சி சர்வீஸ் கிளப்)

தேதி

தலைவர்

செயலாளர்

பொருளாளர்

15/10/2018

திரு.P.S.ஜெகவீரன்,M.A.B.L

திரு.V.கல்லானை

திரு.A.அன்பில் தர்மலிங்கம் ,M.E

12/09/2020

திரு.பேரா.முனைவர். பொன்.விஜயன்